Connect with us

Raj News Tamil

அரசியலில் ஸ்டாலினை பின்பற்றும் விஜய்…!

சினிமா

அரசியலில் ஸ்டாலினை பின்பற்றும் விஜய்…!

நடிகர்கள் அரசியலுக்கு வருவது தமிழ்நாட்டிற்கு புதிதல்ல. அந்த வரிசையில் நடிகர் விஜய்யும் அரசியலுக்கு வருவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் நேற்று நடந்த விஜய் மக்கள் இயக்க ஆலோசனை கூட்டம் அதனை உறுதி செய்துள்ளது.

இந்நிலையில் லியோ படம் வெளிவருவதற்கு முன், விஜய் தமிழ்நாடு முழுவதும் நடைபயணம் மேற்கொள்ள இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. விஜய்யின் அரசியல் பிரவேசத்திற்கு, மக்களின் ஆதரவு உள்ளதா? இல்லையா? என்பதை தெரிந்து கொள்ளவே இந்த முயற்சி என்றும் சொல்லப்படுகிறது.

கடந்த சட்டப்பேரவை தேர்தலுக்கு முன்பு தமிழக முதல்வர் ஸ்டாலினும் தமிழ்நாடு முழுவதும் நடைபயணம் மேற்கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

More in சினிமா

To Top