Connect with us

Raj News Tamil

மேல ஏத்திவிட்டவரையே மறந்த விஜய்..!

சினிமா

மேல ஏத்திவிட்டவரையே மறந்த விஜய்..!

நாளைய தீர்ப்பு என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு ஹீரோவாக அறிமுகமானவர் நடிகர் விஜய். இந்த படம் விஜய்க்கு சரிவர கைகொடுக்காததால், தனது செந்தூரபாண்டி படத்தில் வாய்ப்பு கொடுத்திருக்கிறார் கேப்டன் விஜயகாந்த். இந்த படத்தின் மூலம் தான் விஜய் பட்டி தொட்டி எங்கும் பிரபலமானார்.

இந்நிலையில், நடிகர் மீசை ராஜேந்திரன் பேட்டி ஒன்றை அளித்துள்ளார். அதில், என்னை பார்க்கும் போதெல்லாம் கேப்டனை பற்றி நடிகர் விஜய் நலம் விசாரிப்பார் என்றும் நான் இந்த அளவிற்கு இப்போது இருக்கிறேன் என்றால் அதற்கு காரணம் கேப்டன் தான் என்றும் விஜய் கூறியதாக அவர் தெரிவித்திருக்கிறார்.

மேலும், கேப்டனை ஒரு முறை கூட வீட்டிற்கு சென்று விஜய் பார்க்காதது எனக்கு வருத்தத்தை அளிக்கிறது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

இப்படி கை கொடுத்து தூக்கி விட்ட விஜயகாந்தை, நடிகர் விஜய் மறந்துவிட்டாரா என்று நெட்டிசன்கள் கமெண்ட் பதிவிட்டு வருகின்றனர்.

More in சினிமா

To Top