யோகிபாபுவிற்கு விஜய் கொடுத்த சர்ப்ரைஸ் கிஃப்ட்!

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவர் யோகி பாபு. இவர், தளபதி விஜயுடன், மெர்சல், பிகில், சர்க்கார், பீஸ்ட் என்று பல்வேறு படங்களில் நடித்துள்ளார்.

இந்நிலையில், யோகிபாபு, தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், விஜய் அண்ணா எனக்கு இந்த கிரிக்கெட் Bat-ஐ Gift -ஆக வழங்கியுள்ளார் என்று பதிவிட்டுள்ளார்.

மேலும், கையில் பேட் உடன் இருக்கும் புகைப்படத்தையும் அவர் பதிவிட்டுள்ளார். இந்த பதிவை, விஜய் ரசிகர்கள் வைரலாக்கி வருகின்றனர்.