Connect with us

Raj News Tamil

மாணவர்களுக்கு பரிசுத்தொகை வழங்கும் விஜய்…எவ்வளவு தெரியுமா??

சினிமா

மாணவர்களுக்கு பரிசுத்தொகை வழங்கும் விஜய்…எவ்வளவு தெரியுமா??

தமிழ்நாட்டில் உள்ள 234 சட்டமன்ற தொகுதிகளிலும் 10 மற்றும் 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் முதல் மூன்று இடங்களைப் பெற்ற மாணவ மாணவிகளுக்கு விஜய் ஊக்கத்தொகை, பாராட்டுச் சான்றிதழ் வழங்க உள்ளார்.

அகில இந்திய தலைமை தளபதி விஜய் மக்கள் இயக்கம் சார்பாக சென்னை, நீலாங்கரையில் உள்ள ஆர்.கே.கன்வென்ஷன் சென்டரில் இதற்கான விழா இன்று தொடங்கியுள்ளது. இதையொட்டி, மாணவ மாணவிகள் அவர்களது பெற்றொர்களுடன் கல்வி விருது விழா நடைபெறும் அரங்கில் கலந்து கொண்டனர்.

தொகுதி வாரியாக, முதலிடம் பிடித்த மாணவர்களுக்கு ரூ. 25 ஆயிரம் ரூபாய் மற்றும் பாராட்டுச் சான்றிதழை வழங்க உள்ளார் விஜய். தொகுதி வாரியாக இரண்டாம் இடம் பிடித்தவர்களுக்கு ரூ. 15 ஆயிரமும், மூன்றாம் இடம் பிடித்தவர்களுக்கு ரூ. 10 ஆயிரமும் காசோலையாக வழங்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Click to comment

You must be logged in to post a comment Login

Leave a Reply

More in சினிமா

To Top