Connect with us

Raj News Tamil

விஜய்-க்கு ஆதரவு குரல் கொடுத்த பிரபல நடிகர்!

சினிமா

விஜய்-க்கு ஆதரவு குரல் கொடுத்த பிரபல நடிகர்!

தமிழ் சினிமாவின் வசூல் சக்கரவர்த்தி என்று அழைக்கப்படுபவர் விஜய். இவர் நடிப்பில் வெளியாகும் திரைப்படங்கள், குறைந்தது 100 கோடியாவது பெறுவதால் தான், இவரை இந்த பெயர் கொண்டு ரசிகர்கள் அழைக்கிறார்கள்.

தளபதி விஜய் தற்போது, சினிமாவில் இருந்து விலகி, அரசியல் கட்சி ஒன்றை ஆரம்பித்துள்ளார். ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ள படங்களை மட்டும் முடித்துவிட்டு, அரசியலில் தீவிரமாக இறங்க இருப்பதாகவும், அவர் கூறியுள்ளார்.

நடிகர் விஜய் அரசியலில் இறங்க இருப்பதற்கு, ஒரு சிலர் ஆதரவு தெரிவித்தாலும், அரசியலில் இருக்கும் நபர்கள், தங்களது எதிர்ப்பை தொடர்ந்து வெளிப்படுத்தி வருகின்றனர்.

இந்நிலையில், இயக்குநரும், நடிகருமான சமுத்திரக்கனி பேட்டி ஒன்றை அளித்துள்ளார்.

அதில், படத்திற்கு ரூ. 200 கோடி சம்பாதிக்கும் ஒரு மனுஷன் இனி நடிக்க மாட்டேன்னு சொல்ல தைரியம் வேணும். அவர் கிட்டயே நிறைய இருக்கும், அவர் அரசியலுக்கு வந்து திருட போறது இல்ல.

சினிமாவில் தோற்று போய் வரல, படம் இல்லாமல் வரல, மக்களுக்கு ஏதாவது செய்யலாம் என்று வருகிறார். அவருக்கு எனது சல்யூட் என்று தெரிவித்துள்ளார்.

More in சினிமா

To Top