சிவகார்த்திகேயனுக்கு விஜய் வழங்கிய பரிசு! என்ன தெரியுமா?

விஜய் நடித்திருந்த தி கோட் திரைப்படம், கடந்த செப்டம்பர் 5-ஆம் தேதி அன்று ரிலீஸ் ஆனது. இந்த திரைப்படத்தில், நடிகர் சிவகார்த்திகேயனும் சிறப்புத் தோற்றத்தில் நடித்திருந்தார்.

இது, ரசிகர்களுக்கு மிகப்பெரிய சர்ப்ரைஸாக இருந்தது. இந்த திரைப்படம் வெளியாகி ஒரு மாதம் ஆன நிலையில், படப்பிடிப்பு தளத்தில் நடந்த சுவாரசியமான நிகழ்வுகளின் வீடியோக்களை தயாரிப்பு நிறுவனம் வெளியிட்டு வருகிறது.

அந்த வகையில், புதிய வீடியோ ஒன்றை அந்நிறுவனம் வெளியிட்டுள்ளது. அந்த வீடியோவில், நடிகர் சிவகார்த்திகேயனுக்கு விலை உயர்ந்த கைக்கடிகாரத்தை விஜய் பரிசாக வழங்கியுள்ளார். இந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.

RELATED ARTICLES

Recent News