முதலை தாக்கியதில் விஜய் படுகாயம்!

வண்டலூர் பூங்காவில் முதலை ஒன்றை பண்ணையில் இருந்து மாற்றிய போது பராமரிப்பாளரை கடித்ததில் பலத்த காயம் ஏற்பட்டது.

வண்டலூர் அறிஞர் அண்ணா உயிரியல் பூங்கா வளாகத்தின் அடுக்குமாடி குடியிருப்பில் தங்கி ஐந்து வருடங்களாக தற்காலிக பணியாளராக வேலை செய்பவர் விஜய் (23) கடந்த மூன்று மாதங்களாக சதுப்புநில முதலை பண்ணையில் பராமரிப்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்.

இந்த நிலையில் பண்ணையில் முதலைகள் எண்ணிக்கை அதிகளவில் இருந்ததால் மாற்று இடத்தில் விடுவதற்காக விஜய் முதலை ஒன்றை பிடித்ததாக கூறப்படுகிறது. இதில் எதிர்பாராத விதமாக விஜயின் காலில் முதலை கடித்ததில் பலத்த காயமடைந்தார். இதனை கண்ட சக ஊழியர்கள் விஜயை மீட்டு அருகில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கபட்டு வருகிறது.

விஜயின் தந்தை ஏசு நிரந்தர பணியாளரான இவர் பூங்காவில் நெருப்பு கோழி பராமரிப்பாளராக இருந்து வருகிறார்.

RELATED ARTICLES

Recent News