விஜய் தான் அடுத்த ”சூப்பர் ஸ்டார்” ஓப்பனாக பேசிய சரத்குமார்..!

விஜய், ராஷ்மிகா மந்தனா உள்ளிட்டோர் நடித்து வரும் திரைப்படம் வாரிசு. பொங்கலுக்கு வெளியாக உள்ள இப்படத்தின், இசை வெளியீட்டு விழா, நேரு இண்டோர் ஸ்டேடியத்தில் நேற்று முன்தினம் நடைபெற்றது.

மாநாடு போல் நடந்த, இந்த விழாவில் திரை பிரபலங்கள், ரசிகர்கள் என பல்வேறு தரப்பினர் கலந்து கொண்டனர். அதில் கலந்து கொண்ட நடிகர் சரத்குமார் அடுத்த சூப்பர் ஸ்டார் தான் என்று பேசியுள்ளார்.

மேலும் சூர்யவம்சம் படத்தின் வெற்றி விழாவில் நாளைய சூப்பர் ஸ்டார் விஜய் என்று கூறியது தற்போது நிரூபணமாகிவிட்டது என்று நினைவு கூர்ந்தார். இதையடுத்து அரங்கத்திலேயே விஜய் ரசிகர் கத்தி கூச்சலிட்டு தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.