வாரிசு படத்தின் இசை வெளியீட்டு விழா, நேற்று சென்னையில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் கலந்துக் கொண்ட நடிகா விஜய், தனது ரசிகர்கள் மத்தியில் உரையாற்றினார். அதில், வழக்கம் போல், தன்னுடைய குட்டி ஸ்டோரியை, கூறினார். அந்த குட்டி ஸ்டோரி என்னவென்றால், ஒரு வீட்டில் அப்பா, அம்மா, அண்ணன், தங்கை இருந்தார்களாம்.
அப்பா வேலை முடிந்து வீட்டிற்கு வரும்போது, இரண்டு சாக்லேட்டுகளை வாங்கிவிட்டு வருவாராம். இதனை, அப்பா கொடுத்த உடனே அந்த குட்டி பாப்பா சாப்பிட்டு விடுவாளாம். ஆனால், அந்த அண்ணன், அடுத்த நாள் பள்ளிக்கு சென்று சாப்பிடலாம் என்று, வீட்டில் ஒரு இடத்தில் மறைத்து வைப்பாராம்.
ஆனால், அந்த சாக்லேட்டையும் தேடி எடுக்கும் அந்த குட்டி பாப்பா, அதையும் சாப்பிட்டு விடுவாராம். ஒரு நாள், அன்பு என்றால் என்னவென்று, அண்ணனிடம், அந்த குட்டி பாப்பா கேட்பாராம். அதற்கு, ’நான் வைக்கும் சாக்லெட்டை தினமும் நீ சாப்பிட்டு கொண்டிருக்கிறாய்.
நீ சாப்பிட்டு கொண்டிருக்கிறாய் என்று தெரிந்தும் அதே இடத்தில் வைக்கின்றனே அதற்கு பெயர் தான் அன்பு’ என்று கூறினார். அதுபோன்ற அன்பை பற்றி தான் ’வாரிசு’ படம் பேசுகிறது என்றும், அன்பு என்பது ஒரு அளவில்லாத ஆயுதம் என்றும் அந்த அன்பை எல்லோரும் பின்பற்றுங்கள் என்றும் விஜய் தெரிவித்தார்.