இன்னும் 60 நாட்கள் தான் – லியோ படம் குறித்து வெளியான அப்டேட்..!

இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் விஜய் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் ‘லியோ’. இப்படத்திற்கு அனிருத் இசையமைத்து வருகிறார். செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ நிறுவனம் படத்தை தயாரித்து வருகிறது. ‘லியோ’ படம் வரும் அக்டோபர் மாதம் 19ம் தேதி வெளியாகிறது.

படத்தின் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் நேற்று தனியார் விருது வழங்கும் விழாவில் கலந்து கொண்டார். அப்போது பேசிய அவர் முதற்கட்டமாக காஷ்மீரில் 60 நாட்கள் படப்பிடிப்பு நிறைவுபெற்றுள்ளது.

இதையடுத்து இன்னும் 60 நாட்கள் படப்பிடிப்பு நடக்கவுள்ளது. அத்துடன் மொத்த படப்பிடிப்பும் முடிவடையும். திட்டமிட்டபடி படம் வெளியாகும் என அவர் கூறினார்.

RELATED ARTICLES

Recent News