விஜயின் மக்கள் இயக்கம் அரசியல் கட்சியாக மாறி வருகிறது என்பது அனைவரும் அறிந்த விஷயம் தான். அந்த வகையில் அரசியல் கட்சிகளில் இருப்பதை போல விஜய் மக்கள் இயக்கமும் பல்வேறு அணிகளை உருவாக்கி வருகிறது.
கடந்த சில நாட்களுக்கு முன்பு வழக்கறிஞர் அணிக்கான ஆலோசனைக் கூட்டம், பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் தலைமையில் நடைபெற்றது. இந்நிலையில் தகவல் தொழில்நுட்ப அணியின் ஆலோசனை கூட்டம் இன்று நடைபெறவுள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது.
அதாவது விஜய் மக்கள் இயக்கத்தின் திட்டங்களை சமூக ஊடகங்கள் மூலமாக மக்களுக்கு கொண்டு செல்லும் பணியை இந்த தொழில்நுட்ப அணி மேற்கொள்ளும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.