Connect with us

Raj News Tamil

விஜய் படங்களை விமர்சித்த வைரமுத்து?

cinema news in tamil

சினிமா

விஜய் படங்களை விமர்சித்த வைரமுத்து?

தமிழ் சினிமாவில் மட்டுமின்றி, தமிழ் சமூகத்திலேயே மிகவும் திறமையான கவிஞர்களில் ஒருவர் வைரமுத்து. இவர், ரஜினி, கமல், அஜித், விஜய் என்று பல்வேறு முன்னணி நடிகர்களின் படங்களில், பல அற்புதமான பாடல்களை எழுதியுள்ளார்.

ஆனால், தற்போது இவருக்கு பாடல் எழுதும் வாய்ப்பு குறைந்துவிட்டது. இந்நிலையில், பனை என்ற படத்தின் இசை வெளியீட்டு விழாவில் கலந்துக் கொண்ட வைரமுத்து, உரையாற்றியிருந்தார்.

அப்போது பேசிய அவர், தற்போது வரும் தமிழ் படங்களின் பெயர்களை பார்க்கையில் வெட்கப்படுகிறேன் என்றும், அழகான தமிழ் சொற்களை, இயக்குநர்கள் தலைப்பாக வைக்க வேண்டும் என்றும் கூறியுள்ளார்.

பொதுவாக, விஜயின் மாஸ்டர், பீஸ்ட், லியோ, தி கோட் என்று தொடர்ச்சியாக பல்வேறு படங்களுக்கு, ஆங்கிலத்தில் தலைப்பு வைக்கப்பட்டு வருகிறது. மற்ற நடிகர்களின் சில படங்களுக்கும் ஆங்கிலத்தில் டைட்டில் வைக்கப்படுகின்றன. ஆனால், விஜய் படங்களுக்கு தான் ஆங்கிலத்தில் அதிக அளவில் டைட்டில் வைக்கப்படுகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

More in சினிமா

To Top