வெற்றிமாறனுக்கு No..! தெலுங்கு இயக்குநருக்கு Yes..!

தளபதி விஜய் தற்போது தி கோட் படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்திற்கு பிறகு, கடைசியாக மற்றொரு படத்தில் நடிப்பார் என்றும், இப்படத்தை வெற்றிமாறன் தான் இயக்குவார் என்றும் சொல்லப்பட்டது.

தற்போது தளபதி 69ஐ தெலுங்கு இயக்குநர் திரிவிக்ரம் இயக்கவிருப்பதாக தகவல் வெளிவந்துள்ளது. சமீபத்தில் இவர் இயக்கத்தில் வெளியான குண்டூர் காரம் தெலுங்கில் மிகப்பெரிய வெற்றியடைந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

ஆனால் இதனை அறிந்த விஜய் ரசிகர்கள் வாரிசு படம் மாதிரி இந்தப் படம் இல்லாமல் இருந்தால் சரி என்று கமெண்ட்ஸ் பதிவிட்டு வருகின்றனர்.

RELATED ARTICLES

Recent News