“இது ரொம்ப தப்பு தளபதி” – விஜயின் முடிவால் பரபரப்பு!

தெலுங்கு இயக்குநர் வம்சி இயக்கத்தில், வாரிசு திரைப்படத்தில் விஜய் நடித்து வருகிறார். இந்த படத்திற்கு பிறகு, லோகேஷ் கனகராஜ் படத்தில் விஜய் நடிக்க உள்ளார். இந்நிலையில், விஜயின் அடுத்த படம் தொடர்பான தகவல் தற்போது வெளியாகியுள்ளது. அதன்படி, லோகேஷ் படத்திற்கு பிறகு, அட்லியுடன் விஜய் இணைய உள்ளாராம்.

இதுமட்டுமின்றி, புஷ்பா படத்தை தயாரித்த மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தான், விஜயின் இந்த திரைப்படத்தையும் தயாரிக்க உள்ளது. தமிழகத்தில் பல்வேறு தயாரிப்பாளர்கள் வாழ்வாதாரத்தை இழந்து தவித்து வருகின்றனர்.

ஆனால், அவர்களுக்கு வாய்ப்பு வழங்காமல், தெலுங்கில் உள்ள தயாரிப்பாளர்களுக்கே விஜய் தொடர்ந்து வாய்ப்பு வழங்கி வருவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதுகுறித்து விஜய் ஆலோசிக்க வேண்டும் என்றும் சினிமாதுறையினர் மத்தியில் பேசப்பட்டு வருகிறது.