சினிமா
19 வயது நடிகையுடன் ஜோடி சேர்ந்து நடிக்கும் விஜய்! ரசிகர்கள் அதிர்ச்சி!
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், விஜய நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் லியோ. அனிருத் இசையமைக்கும் இந்த படத்தில், த்ரிஷா, சஞ்சய் தத், அர்ஜூன், கௌதம் மேனன், மன்சூர் அலிகான், மிஷ்கின் உள்ளிட்ட பல்வேறு பிரபலங்கள் நடித்து வருகின்றனர்.
இந்த படத்தை முடித்த பிறகு, வேறு எந்த இயக்குநருடன் விஜய் இணைவார் என்று பலரும் எதிர்பார்த்து வருகின்றனர். இந்நிலையில், அதுதொடர்பான தகவல் ஒன்று கிடைத்துள்ளது. அதன்படி, தளபதி 68 படத்தை தெலுங்கு இயக்குநர் கோபி சந்த் தான் இயக்க இருப்பதாக கூறப்படுகிறது.
சூப்பர் குட் பிலிம்ஸ் தான் தயாரிக்க இருப்பதாகவும் சொல்லப்படுகிறது. மேலும், இந்த படத்தில், விஜய்க்கு ஜோடியாக, நடிகை க்ரித்தி ஷெட்டி நடிக்க இருப்பதாகவும் தகவல் கசிந்துள்ளது.
19 வயதான நடிகை விஜய்க்கு ஜோடியாக நடிக்க இருப்பது, ரசிகர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது செட் ஆகுமா? ஆகாதா? என்ற குழுப்பத்தில் ரசிகர்கள் உள்ளனர். விஜயின் இளைய மகளின் வயது 17 என்பதும், அவரை விட 2 வயது மூத்த பெண்ணுடன் தான் விஜய் ஜோடியாக நடிக்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
You must be logged in to post a comment Login