சினிமா
அஜித்தின் ப்ளாக் பஸ்டர் இயக்குநருடன் இணையும் விஜய்! இத நான் எதிர்பார்க்கல..!
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகும் லியோ படத்தில், விஜய் தற்போது நடித்து வருகிறார். இந்த படத்திற்கு பிறகு, கோபிசந்த் என்ற தெலுங்கு இயக்குநர் உடன், நடிக்க இருப்பதாக கூறப்பட்டது.
ஆனால், தற்போது வேறொரு புதிய தகவல் ஒன்று கசிந்துள்ளது. அதன்படி, அஜித்தின் மங்காத்தா படத்தை இயக்கிய வெங்கட் பிரபு தான், விஜயின் 68-வது படத்தை இயக்க இருப்பதாக கூறப்படுகிறது.
சமீபத்தில் விஜயை சந்தித்த வெங்கட் பிரபு, மாஸ் ஆக்ஷன் கதை ஒன்றை கூறியுள்ளாராம். இந்த கதை விஜய்க்கு மிகவும் பிடித்துவிட்டதாகவும், இதில் அவர் நடிக்க சம்மதம் தெரிவித்துள்ளார் என்றும் கூறப்படுகிறது.
இந்த தகவல் உண்மையாகும் பட்சத்தில், அது விஜயின் சிறந்த திரைப்படங்களில் ஒன்றாக அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
You must be logged in to post a comment Login