விஜய் நடிக்கும் 68வது படத்தை வெங்கட் பிரபு இயக்க உள்ளார். ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்தப் படத்துக்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கிறார். இதில் விஜய் 2 வேடங்களில் நடிப்பதாகக் கூறப்படுகிறது.
இப்படத்தில் மீனாட்சி சவுத்ரி நாயகியாக நடிக்கிறார். மேலும் பிரசாந்த், மோகன், பிரபுதேவா, சினேகா, லைலா, ஜெயராம் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.
படத்தின் படப்பிடிப்பு கடந்த சில நாட்களுக்கு முன் சென்னையில் பூஜையுடன் தொடங்கியது. இந்நிலையில், படத்தின் பூஜை தொடர்பான வீடியோவை படக்குழு இன்று வெளியிட்டுள்ளது.