தமிழ் சினிமாவின் டாப் நடிகர்களில் ஒருவர் தளபதி விஜய். சினிமாவில் நடிப்பது மட்டுமின்றி, அரசியலில் இயங்க வேண்டும் என்பதும், விஜயின் கனவுகளில் ஒன்றாக இருந்து வருகிறது. இதுகுறித்து பழைய பேட்டி ஒன்றில், விஜயே கூறியிருக்கிறார்.
இந்நிலையில், அரசியலில் ஈடுபடும் தன்னுடைய முதல் முயற்சியாக, அம்பேத்கரை, விஜய் கையில் எடுத்துள்ளார். அதாவது, வரும் ஏப்ரல் 14-ஆம் தேதி அன்று, அம்பேத்கரின் 132-வது பிறந்த நாள் விழா கொண்டாடப்பட உள்ளது.
இதனை யொட்டி, அம்பேத்கரின் சிலைக்கு, மாலை அணிவித்து மரியாதை செலுத்த வேண்டும் என்று அனைத்து நிர்வாகிகளுக்கும் தளபதி விஜய் உத்தரவிட்டுள்ளார்.
மாவட்டம்தோறும் நடக்கும் இவ்விழாவில், அனைத்து அணி தலைவர்களும், நிர்வாகிகளும் பங்கேற்க வேண்டும் என்றும், காவல்துறையினரிடம் முன்கூட்டியே அனுமதி பெற வேண்டும் என்றும், விஜய் மக்கள் இயக்கத்தின் பொதுச் செயலர் புஸ்சி ஆனந்த், நேற்று நிர்வாகிகளுக்கு கடிதம் அனுப்பியுள்ளார்.