தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவர் தளபதி விஜய். இவர் சினிமா மட்டுமின்றி, அரசியலிலும் அதிக ஆர்வம் கொண்டவராக இருந்து வருகிறார். விரைவில் அரசியல் கட்சியை தொடங்குவார் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
அதன் ஒரு பகுதியாக, விஜய் பயிலகம், விஜய் விழியகம் என்று பல்வேறு திட்டங்களை உருவாக்கி வருகிறார்.
இந்நிலையில், விஜயின் அரசியல் வருகை குறித்து, நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகனிடம் நேர்காணல் ஒன்றில் கேள்வி கேட்கப்பட்டுள்ளது.
இதற்கு பதில் அளித்த அவர், விஜயை பார்க்கும்போது, பாவமாக உள்ளது என்று தெரிவித்தார்.
மேலும், அரசியல் களம் பொன் விளையுற பூமி கிடையாது என்றும், தற்போது மக்கள் மிகவும் விழிப்புணர்வுடன் இருக்கிறார்கள் என்றும் கூறினார்.