டோரா புஜ்ஜிக்காக ஒன்றாக இணைந்த அனிருத்-விஜய்சேதுபதி!

ஆயுஷ்மான் குரானா, தபு, ராதிகா ஆப்தே நடிப்பில், கடந்த 2018-ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் அந்தாதுன். பெரும் வெற்றியை பெற்ற இந்த திரைப்படம் தமிழ் உட்பட பல்வேறு மொழிகளில் ரீமேக் செய்யப்பட்டுள்ளது.

தமிழில் அந்தகன் என்ற பெயரில், பிரசாந்த் நடித்துள்ள இந்த திரைப்படத்தை, அவரது தந்தை தியாகராஜன் இயக்கி வருகிறார். படம் முழுவதும் முடிந்த நிலையில், இறுதிகட்ட காட்சிக்காக டோரா புஜ்ஜி என்ற பாடல், பிரம்மாண்டமாக உருவாக்கப்பட்டுள்ளது.

இசையமைப்பாளர் அனிருத்தும், மக்கள் செல்வன் விஜய்சேதுபதியும், இணைந்து பாடியுள்ள இந்த பாடலுக்கு, பிரபுதேவா நடனம் அமைத்துள்ளார். இந்த பாடல் காட்சி, பிரம்மாண்டமான அரங்கம் ஒன்றில் இன்று திரையிடப்பட உள்ளது. இந்த பாடலின் திரையிடலுக்கு பின், படத்தின் இசை வெளியீட்டு விழா நடைபெற உள்ளது.