தனது யதார்த்தமான நடிப்பால் தமிழ் சினிமா ரசிகர்களை கட்டிப்போட்டவர் மக்கள் செல்வன் விஜய்சேதுபதி. இவர் தற்போது மிஸ்கின் இயக்கி, இசையமைக்கும் படத்தில் நடிக்கவுள்ளார்.
கலைப்புலி எஸ்.தாணு தயாரிக்கும் இப்படத்தில் கதாநாயகியாக டிம்பிள் ஹயாதியும், முக்கிய கதாபாத்திரங்களில் கே.எஸ்.ரவிக்குமார், நாசர், வினய் ராய், பாவனா, சம்பத் ராஜ் , பப்லு பிருத்விராஜ் ஆகியோர் நடிக்க இருக்கின்றனர்.
இந்நிலையில் இப்படத்தை பற்றிய சுவாரஸ்ய தகவல் ஒன்று கிடைத்துள்ளது. அதாவது, விஜய் சேதுபதி – மிஷ்கின் கூட்டணியில் உருவாகும் இந்த படத்திற்கு ‘ட்ரெயின்’ என பெயரிடப்பட்டுள்ளது. மேலும் இப்படத்தின் படப்பிடிப்பு இன்று துவங்கி உள்ளது.
தொடர்ச்சியாக தோல்வியை சந்தித்து வரும் விஜய் சேதுபதிக்கு இந்த திரைப்படமாவது வெற்றி தருமா? என்ற எதிர்பார்ப்பில் அவரது ரசிகர்கள் காத்து கொண்டிருக்கிறார்கள்.