பாரதிராஜா, விதார்த் ஆகியோர் நடிப்பில், பெரும் வெற்றியை பெற்ற திரைப்படம் குரங்கு பொம்மை. இந்த படத்தின் இயக்குநர் நிதிலன் சுவாமிநாதன், நீண்ட நாட்களாக எந்தவொரு திரைப்படத்தையும் எடுக்காமல், இருந்து வந்தார்.
இந்நிலையில், இவர் அடுத்ததாக இயக்க உள்ள படம் தொடர்பான தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, விஜய்சேதுபதி நடிக்க உள்ள படத்தை தான், அவர் இயக்க உள்ளாராம்.
நட்டி நட்ராஜ், முனிஸ்காந்த் ஆகியோர் முன்னணி கதாபாத்திரத்தில் நடிக்க உள்ள இந்த படம், அதிரடி ஆக்ஷன் காட்சிகளுடன் உருவாக உள்ளதாம்.
மேலும், இந்த படத்திற்கு, மகாராஜா என்று பெயர் வைக்கப்பட உள்ளதாகவும், விரைவில் இதுதொடர்பான அறிவிப்பு வெளியாகும் என்றும் கூறப்படுகிறது.