புஷ்பா திரைப்படம் தான், இந்திய சினிமாவின் ஹாட் டாபிக்காக இருந்து வருகிறது. இந்த திரைப்படம் தொடர்பான ஒவ்வொரு செய்தியும், ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.
இவ்வாறு இருக்க, புஷ்பா படம் தொடர்பான இன்னொரு சுவாரசிய தகவல், தற்போது கிடைத்துள்ளது. அதன்படி, புஷ்பா 1 மற்றும் 2 ஆகிய திரைப்படங்களில் நடித்திருந்த ஃபகத் ஃபாசிலின் கதாபாத்திரத்தில், முதலில் நடிகர் விஜய்சேதுபதி தான் நடிக்க இருந்தாராம்.
ஆனால், சில பிரச்சனைகளின் காரணமாக, அவரால் நடிக்க முடியவில்லையாம். இதேபோல், அல்லு அர்ஜூனின் புஷ்பா கதாபாத்திரத்தில், நடிகர் மகேஷ் பாபுவும், ராஷ்மிகா மந்தனாவின் ஸ்ரீவள்ளி கதாபாத்திரத்தில் சமந்தாவும் நடிப்பதற்கு அணுகப்பட்டதாம். ஆனால், இருவரும் அந்த கதாபாத்திரத்தை ஏற்க மறுத்துவிட்டார்களாம்.