வித்தியாசமான கதைக் களங்களை தேர்ந்தெடுத்து நடித்து வருபவர் விஜய்சேதுபதி. இவர் கடைசியாக மகாராஜா என்ற ப்ளாக் பஸ்டர் ஹிட் நடித்திருந்தார்.
இந்த வெற்றியின் காரணமாக, இவரது அடுத்த படங்களின் மீதான எதிர்பார்ப்பு என்பது அதிகரித்துள்ளது. இந்நிலையில், நடிகர் விஜய்சேதுபதியின் அடுத்த படைப்பு தொடர்பான தகவல் ஒன்று கிடைத்துள்ளது.
அதாவது, இவர் அடுத்ததாக, வெப் சீரிஸ் ஒன்றில் நடிக்க உள்ளாராம். இந்த வெப் சீரிஸில், விஜய்சேதுபதியுடன், குட் நைட் மணிகண்டனும் இணைந்து நடிக்க உள்ளாராம்.
இவர்கள் இரண்டு பேரும், காதலும் கடந்து போகும் படத்தில் இணைந்து நடித்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.