தமிழ் சினிமாவில் வித்தியாசமான கதைக்களங்களில் தொடர்ச்சியாக நடித்து வருபவர் விஜய்சேதுபதி. வில்லன், குணசித்திர கதாபாத்திரம், ஹீரோ என்ற எந்த கதாபாத்திரமாக இருந்தாலும், கதைக்கு தேவைப்பட்டால், தைரியமாக நடிக்கக் கூடியவர்.
ஆனால், இதுவே இவருக்கு சில தர்ம சங்கடங்களை ஏற்படுத்தியுள்ளது. இதனால், இனிமேல் ஹீரோவாக மட்டுமே நடிப்பேன் என்று அவர் கூறியிருந்தார். இவ்வாறு இருக்க, நடிகர் சூர்யாவின் 45-வது படத்தில், விஜய்சேதுபதி நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்த கதாபாத்திரம், வில்லனாக இருப்பதற்கு வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது. இந்த தகவலை அறிந்த ரசிகர்கள், சபதத்தை மீறியதற்கு என்ன காரணமோ என்று, கேள்வி எழுப்பி வருகின்றனர்.