மக்கள் செல்வன் என்று ரசிகர்களால் அழைக்கப்படும் விஜய்சேதுபதி, கடந்த சில வருடங்களாக, தொடர்ந்து தோல்வி படங்களை கொடுத்து வந்தார். ஆனால், கடந்த வருடம் வெளியான மகாராஜா, விடுதலை 2 ஆகிய இரண்டு திரைப்படங்களும், அவரை காப்பாற்றியிருந்தது.
தற்போது, மிஷ்கின் இயக்கத்தில் உருவாகி வரும் டிரைன் என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்நிலையில், விஜய்சேதுபதியின் அடுத்த படம் குறித்து, புதிய தகவல் ஒன்று கிடைத்துள்ளது.
அதாவது, தெலுங்கு சினிமாவில் முன்னணி இயக்குநராக உள்ள பூரி ஜெகன் நாத், விஜய்சேதுபதியிடம் கதை ஒன்றை கூறியுள்ளார். இந்த கதை, அவருக்கு பிடித்துவிட்டதால், இருவரும் இணைந்து பணியாற்ற இருப்பதாக கூறப்படுகிறது.