கடந்த சில வருடங்களாக, தோல்வி படங்களை மட்டுமே, விஜய்சேதுபதி கொடுத்து வந்தார். ஆனால், இந்த வருடத்தில், மகாராஜா என்ற ஹிட் படத்தை கொடுத்து, தனது மார்கெட்டை மீண்டும் பெற்றுவிட்டார். மேலும், விடுதலை 2 திரைப்படமும், கலவையான விமர்சனங்களை பெற்றாலும், வசூலில் லாபத்தை பெற்று வருகிறது.
இதனால், அவரது அடுத்த படங்களை எதிர்நோக்கி ரசிகர்கள் எதிர்பார்ப்பில் உள்ளனர். இந்நிலையில், விஜய்சேதுபதி நடித்த இரண்டு திரைப்படங்கள், ஒரே மாதத்தில் ரிலீஸ் ஆக உள்ளதாம்.
அதாவது, பிசாசு 2 என்ற திரைப்படத்தில், சிறப்புத் தோற்றத்திலும், Train என்ற படத்தில் ஹீரோவாகவும், விஜய்சேதுபதி நடித்துள்ளார்.
இந்த இரண்டு திரைப்படங்களும், வரும் மார்ச் மாதம் தான் ரிலீஸ் ஆக உள்ளதாம். இந்த இரண்டு திரைப்படங்களின் இயக்குநரும், மிஷ்கின் தான் என்பது குறிப்பிடத்தக்கது.