Connect with us

Latest Tamil News, Tamil Nadu News Today, இன்றைய செய்திகள்

விஜய்சேதுபதிக்கு கம்பேக் தருமா மகாராஜா? விமர்சனங்கள் சொல்வது என்ன?

சினிமா

விஜய்சேதுபதிக்கு கம்பேக் தருமா மகாராஜா? விமர்சனங்கள் சொல்வது என்ன?

குரங்கு பொம்மை திரைப்படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானவர் நித்திலன் சுவாமிநாதன். நல்ல வரவேற்பை பெற்ற இந்த திரைப்படம், வசூல் ரீதியாக பெரிய வெற்றியை பெறவில்லை.

இருப்பினும், நல்ல இயக்குநர் என்று பெயர் எடுத்த நித்திலன், 7 வருடங்கள் ஆகியும் ஒரு திரைப்படத்தையும் இயக்காமலே இருந்தார். இதன்காரணமாக, நித்திலன் ஃபீல்டு அவுட் ஆகிவிட்டார் என்று கூறப்பட்டது.

ஆனால், அந்த விமர்சனங்களுக்கு பதிலடி கொடுக்கும் வகையில், மகாராஜா என்ற படத்துடன், மீண்டும் வந்துள்ளார். விஜய்சேதுபதி, அனுராக் காஷ்யப், மம்தா மோகன்தாஸ், அபிராமி உள்ளிட்ட பலர், இப்படத்தில் முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர்.

நாளை வெளியாக உள்ள இப்படத்தின் பத்திரிக்கையாளர்களுக்கான திரையிடல் தற்போது நடைபெற்றுள்ளது. அப்போது, அந்த படத்தை பார்த்த பல்வேறு சினிமா விமர்சகர்கள், தங்களது விமர்சனங்களை, சமூக வலைதளங்களில் வெளியிட்டுள்ளனர்.

அவ்வாறு வெளியான அனைத்து விமர்சனங்களிலும், படத்தை பலரும் தாறுமாறாக புகழ்ந்து வருகின்றனர்.

“படம் எதிர்பார்த்ததை போல் தான் நகரும். ஆனால், அவ்வாறு நகர்ந்தாலும், அது உங்களுக்கு பிடித்த வகையில் இருக்கும்” என்று பலரும் தங்களது விமர்சனங்களில் கூறி வருகின்றனர்.

நீண்ட நாட்களாக பெரிய வெற்றி எதையும் கொடுக்க முடியாமல் தவித்து வந்த விஜய்சேதுபதிக்கு, இப்படம் நிச்சயம் வெற்றியை கொடுக்கும் என்பது, இதன்மூலம் தெரியவந்துள்ளது.

More in சினிமா

To Top