விஜய் அணிந்த சட்டை விலை தெரிந்தால் மெர்சல் ஆயிடுவீங்க!

சினிமா நட்சத்திரங்கள், தங்களது அந்தஸ்தை காட்டுவதற்கு, விலை உயர்ந்த பொருட்களை அணிவது வழக்கம். அந்த வகையில், நடிகர் விஜய் அணிந்துள்ள சட்டையின் விலை, நெட்டிசன்கள் பலரையும், ஆச்சரியமடைய வைத்துள்ளது.

அதாவது, நடிகர் விஜய், தனது ரசிகர் மன்ற நிர்வாகிகளை நேற்று சந்தித்து, புகைப்படம் எடுத்துக் கொண்டார். அப்போது, அவர் அணிந்திருந்த சட்டை குறித்து, பலரும் ஆன்லைனில் தேடியுள்ளனர்.

அதில், விஜய் அணிந்திருந்த, Burberry Brand சட்டை, 32 ஆயிரம் ரூபாய் என்று தெரியவந்துள்ளது. இதனை அறிந்த நெட்டிசன்கள் பலரும், பெரும்பாலான இந்திய மக்களின் மாத வருமானம் கூட இவ்வளவாக இருக்காது. இது நடிகர்களின் செல்வ செழிப்பை காட்டுவதாக உள்ளது என்று கூறி வருகின்றனர்.