விஜயின் செருப்பு விலை என்ன? ரசிகர்கள் ஷாக்!

நடிகர் விஜய் தனது ரசிகர் மன்ற நிர்வாகிகளை நேற்று சந்தித்தார். அப்போது, அவர்களுக்கு ருசியான முறையில் பிரியாணி விருந்தும் வைக்கப்பட்டது.

இந்நிலையில், இந்த நிகழ்ச்சியில் விஜய் கலந்துக் கொண்டபோது, உயர் ரக செருப்பை அணிந்துள்ளார். இதனை பார்த்த நெட்டிசன்கள் சிலர், அந்த செருப்பின் விலையை இணையத்தில் தேடி, கண்டுபிடித்துள்ளனர்.

அதன்படி, அந்த செருப்பின் விலை, ரூபாய் 6 ஆயிரம் என்று அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த தகவல், நெட்டிசன்கள் பலருக்கும் பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.