“காப்பி அடிக்கும் விஜய்” – விஜய் Speech-ஐ விமர்சிக்கும் நெட்டிசன்கள்!

வாரிசு படத்தின் இசை வெளியீட்டு விழா, கடந்த 24-ஆம் தேதி அன்று சென்னையில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் கலந்துக் கொண்ட விஜய், தனது ரசிகர்களிடம், 30 நிமிடங்களுக்கு மேல் உரையாற்றினார்.

அந்த உரையின்போது, பல்வேறு விஷயங்கள் குறித்து பேசிய அவர், என்னுடைய எதிர் போட்டியாளர் நான் தான். வேறொருவரை போட்டியாளராக எடுத்துக்கொள்ள வேண்டாம் என்று கூறியிருந்தார்.

இந்த வீடியோவை பார்த்த நெட்டிசன்கள் சிலர், அன்று ரஜினிகாந்த் பேசியதை தான், இன்று விஜய் காப்பி அடித்துள்ளார் என்று விமர்சித்து வருகின்றனர்.