சினிமா
2026-ஆம் ஆண்டு தேர்தல்.. 3 ஆண்டுகள் பிரேக் எடுக்கும் விஜய்!
லோகேஷ் கனகராஜின் இயக்கத்தில் உருவாகி வரும் லியோ திரைப்படத்தில், விஜய் தற்போது நடித்து வருகிறார். இந்த படத்திற்கு பிறகு, வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவாக உள்ள தளபதி 68 படத்தில் நடிக்க உள்ளார்.
இவ்விரு படங்களும் ரிலீசாகி முடிந்ததும், அதிரடி முடிவு ஒன்றை விஜய் எடுக்க உள்ளாராம். அதாவது, 3 ஆண்டுகளுக்கு எந்தவொரு திரைப்படங்களிலும் நடிக்காமல் இருப்பதற்கு, ஆலோசித்து வருகிறாராம்.
2026-ஆம் ஆண்டு தேர்தலை கணக்கில் கொண்டே, இவர் இந்த முடிவை எடுத்துள்ளதாகவும் கூறப்படுகிறது. இதனை அறிந்த ரசிகர்கள், ஒரு பக்கம் சோகம் அடைந்தாலும், மறுபக்கம் உற்சாகத்தில் இருந்து வருகின்றனர்.
You must be logged in to post a comment Login