தளபதி விஜய், லியோ படத்தின் ஹூட்டிங் வேலைகளை முடித்துவிட்டு சென்னை திரும்பியுள்ளார். காஷ்மீரில் நடந்த இந்த படப்பிடிப்பில், மைனஸ் டிகிரி கடும் குளிரில் எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. அடுத்தகட்டமாக சென்னை மற்றும் ஹைதரபாத் உள்ளிட்ட இடங்களில் ஹூட்டிங் நடக்கவுள்ளதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் விரைவில் நடக்கவிருக்கும் பொன்னியின் செல்வன் 2-வது பாகத்தின் இசை வெளியீட்டு விழாவில், நடிகர் விஜய் கலந்து கொள்ள இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. முன்னதாக பொன்னியின் செல்வன் படத்தில் வந்தியத்தேவன் கதாபாத்திரத்தில், விஜயை நடிக்க வைக்க மணிரத்னம் திட்டமிட்டு இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.