பிரபலங்களின் பட்டியலில் முதலிடம் பிடித்த விஜய்..!

ஆர்மேக்ஸ் மீடியா என்ற நிறுவனம், இந்திய திரைப்பிரபலங்களில் யார் பிரபலமானவர் என்ற ஆய்வை நடத்தியுள்ளது. தற்போது அந்த ஆய்வின் முடிவுகள் வெளியாகியுள்ளன.

அதன்படி முதலிடத்தில் தளபதி விஜய்யும், 2-வது இடத்தில் நடிகர் பிரபாசும், 3-வது இடத்தில் அக்‌ஷய்குமாரும் இடம்பிடித்துள்ளனர். இந்த ஆய்வில் நடிகர் அஜித் 7-வது இடத்தை பிடித்துள்ளார்.

இதே போன்று நடிகைகளுக்காக நடத்தப்பட்ட ஆய்வில் சமந்தா முதலிடத்தை பிடித்துள்ளார். அதற்கு அடுத்த இரண்டு இடங்களை ஆலியா பட்டும், நயன் தாராவும் பிடித்துள்ளனர்.

இதில் அதிகப்படியான தென்னிந்திய நடிகர்களே இடம்பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.