சினிமா
அன்னைக்கு மிஸ் ஆயிடிச்சு.. இப்ப கன்ஃபார்ம்! விஜய் ரசிகர்கள் மகிழ்ச்சி!
விஜய் நடித்து வரும் வாரிசு திரைப்படம் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இந்த படத்தின் புரோமோஷன் பணிகள் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், வாரிசு படத்தின் இசை வெளியீட்டு விழா தொடர்பான தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, துபாய் நாட்டில் தான் இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா நடைபெற உள்ளதாம்.
இதில், விஜய் உள்ளிட்ட படக்குழுவினர் கலந்துக் கொள்ள உள்ளனர். எனவே, விஜயின் பேச்சை கேட்பதற்கு அவருடைய ரசிகர்கள் ஆர்வமாக உள்ளனர். ஆனால், தமிழக ரசிகர்கள் நேரடியாக விஜயின் பேச்சை கேட்பது சற்று கடினமான விஷயமான சூழல் மட்டும் தற்போது ஏற்பட்டுள்ளது.
