மெட்ரோ ரெயிலில் ஒட்டப்பட்ட ‘வாரிசு’ பட போஸ்டரை கிழித்தெறிந்த மர்மநபர்கள்..!

விஜய் நடிப்பில் வரும் பொங்கலுக்கு வெளியாகவுள்ள திரைப்படம் வாரிசு. தமிழ்நாடு முழுக்க அப்படத்தின் புரமோஷன் பணிகளை தீவிரமாக செய்து வருகிறது. சென்னையில் இருந்து கேரளாவுக்கு செல்லும் அனந்தபுரி ரெயிலில் வாரிசு படத்தின் ஸ்டிக்கர்கள் ஒட்டப்பட்டு பிரம்மாண்டமாக புரமோட் செய்யப்பட்டு வந்தது.

இதே போல கடந்த வாரம் சென்னையில் இருந்து தஞ்சாவூர் செல்லும் உழவன் எக்ஸ்பிரஸ் ரெயிலில் ஸ்டிக்கர்கள் ஒட்டப்பட்டு இருந்தன.

இந்நிலையில் நேற்று சென்னையில் இருந்து கேரளாவுக்கு செல்லும் அனந்தபுரி ரெயிலில் ஒட்டப்பட்ட வாரிசு படத்தின் ஸ்டிக்கர்களை மர்மநபர்கள் கிழித்தெறிந்தனர். அந்த போஸ்டர்களை விஜய் ரசிகர்கள் சமூக வலைதளங்களில் பதிவிட்டு தங்களது ஆதங்கத்தை பதிவிட்டு வருகின்றனர்.