கன்னியாகுமரி லோக்சபா தொகுதியின் சிட்டிங் எம்பியாக காங்கிரஸ் கட்சியின் விஜய் வசந்த் உள்ளார். இவரை எதிர்த்து பாஜக சார்பில் முன்னாள் மத்திய இணையமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன், அதிமுக சார்பில் பசிலின் நசரேத்தும், சீமானின் நாம் தமிழர் சார்பில் மரிய ஜெனிபரும் களமிறங்கி உள்ளனர்.
கடந்த 2019 தேர்தலில் திமுக கூட்டணியில் காங்கிரஸ் வேட்பாளராக வசந்தகுமார் வென்றார். அவர் மறைந்த பிறகு 2021ல் நடந்த தேர்தலில் மகன் விஜய் வசந்த் வென்றார். இந்த தேர்தலில் பாஜகவின் பொன் ராதாகிருஷ்ணன் மற்றும் காங்கிரஸின் விஜய் வசந்த் இடையே கடும் போட்டி உள்ளது.
முதல் சுற்று வாக்கு எண்ணிக்கையில் 9,547 ஓட்டுகளை பெற்றுள்ளார் விஜய் வசந்த். பாஜக வேட்பாளர் பொன் ராதாகிருஜ்ணன் 6,219 ஓட்டுகள் பெற்று பின்னடைவை சந்தித்துள்ளார்.
மதியம் 3 மணியளவில் கன்னியாகுமரியில் காங்கிரஸ் வேட்பாளர் விஜய் வசந்த் வெற்றியை நெருங்கி உள்ளார். மதியம் 3 மணியளவில் விஜய் வசந்த் 2 லட்சத்து 86 ஆயிரத்து 598 வாக்குகளை பெற்று முன்னிலை பெற்றுள்ளார். பாஜக வேட்பாளர் பொன் ராதாகிருஷ்ணன் 1 லட்சத்து 62 ஆயிரத்து 704 ஓட்டுகள் பெற்று பின்னடைவை சந்தித்துள்ளார்.