ட்விட்டரில் ட்ரெண்டாகும் விஜய் வசனங்கள்..!

விஜய் மற்றும் ராஷ்மிகா மந்தனா நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் வாரிசு. வருகின்ற பொங்கலுக்கு வெளியாகவுள்ள இப்படத்தின், இசை வெளியீட்டு விழா இன்று சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கில் நடைபெற உள்ளது.

கடந்த சில ஆண்டுகளாக இசை வெளியீட்டு விழாவில் கலந்து கொள்ளும் தளபதி விஜய் நண்பா, நண்பி, நெஞ்சில் குடியிருக்கும் போன்ற வார்த்தைகளை பயன்படுத்தி வருகிறார். தற்போது வாரிசு இசை வெளியீட்டு விழாவான இன்று, நெஞ்சில் குடியிருக்கும் போன்ற வார்த்தைகளை அவரது ரசிகர்கள் ட்ரெண்ட் செய்து வருகின்றனர்.