விஜய் வாரிசு பட விவகாரம்..! தெலுங்கு தயாரிப்பாளர்களை எச்சரிக்கும் சீமான்..!

நடிகர் விஜய், ராஷ்மிகா மந்தனா முன்னணி கதாபாத்திரத்தில் நடித்து வரும் திரைப்படம் வாரிசு. அண்மையில் இப்படத்தை விழாக்காலங்களில் வெளியிட தெலுங்கு தயாரிப்பாளர்கள் தடைவிதித்து அறிக்கை வெளிட்டனர். இதற்கு திரைத்துறையின் மட்டுமில்லாது அரசியல்வாதிகள் உட்பட பல்வேறு தரப்பினர் கண்டனம் தெரிவித்தனர்.

இது குறித்து செய்தியாளர்களிடம் பேட்டியளித்த நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான், தெலுங்கு தயாரிப்பாளர்களின் முடிவு மிகவும் தவறான முன்னுதாரணம் எனத் தெரிவித்தார். மேலும் ஆந்திரா, கன்னடம், மலையாளம் ஆகிய மூன்று மாநிலங்களின் புகலிடமாக விளங்கும் தமிழ் சினிமாவை வஞ்சிப்பது மிகவும் கண்டனத்திற்குறியது என்றார்.

தொடர்ந்து பேசிய சீமான், இது விஜய் படத்திற்கு மட்டுமானதல்ல, ஒட்டுமொத்த தமிழ்த் திரைப்படத்திற்கு தொடுக்கப்பட்டுள்ள மறைமுக நெருக்கடி எனக் கூறினார். இப்போக்கு தொடருமானால் தெலுங்கு திரைப்படங்களை வெளீயிட அனுமதிக்க மாட்டென் என எச்சரிக்கிறேன் எனத் தெரிவித்துள்ளார்.