மீண்டும் இன்னொரு படத்தில் விஜய்? ரசிகர்கள் உற்சாகம்!

தமிழ் சினிமாவின் வசூல் சக்கரவர்த்தி என்று அழைக்கப்படுபவர் நடிகர் விஜய். ஆனால், அரசியல் மீதுள்ள ஆர்வத்தின் காரணமாக, கடைசியாக ஒரே ஒரு படத்தை மட்டும் முடித்துவிட்டு, முழுநேர அரசியலில் அவர் இறங்க இருப்பதாக கூறப்படுகிறது.

இந்நிலையில், நடிகர் விஜய் மீண்டும் இன்னொரு திரைப்படத்தில் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. அதாவது, ஜவான் என்ற வெற்றிப் படத்திற்கு பிறகு, சல்மான் கான் மற்றும் கமல் ஹாசனை வைத்து, புதிய படம் ஒன்றை அட்லி இயக்க உள்ளாராம்.

மிகப்பெரிய பட்ஜெட்டில் உருவாக உள்ள இந்த படத்தில், நடிகர் விஜய் சிறப்பு தோற்றத்தில் நடிக்க உள்ளாராம். மேலும், இப்படத்தில் இடம்பெற உள்ள பாடலில், அவர் நடனம் ஆட இருப்பதாகவும் கூறப்படுகிறது.

இவ்வாறு பரவி வரும் இந்த தகவல், விஜய் ரசிகர்களுக்கு உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஆனால், இந்த தகவலின் உண்மை தன்மை எவ்வளவு என்பது, இன்னும் கேள்விக்குறியாக தான் இருந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

RELATED ARTICLES

Recent News