தமிழ் சினிமாவின் வசூல் ஜாம்பவான்களில் ஒருவர் தளபதி விஜய். சினிமா மட்டுமின்றி, அரசியலில் ஈடுபடும் ஆர்வமும் கொண்ட இவர், விரைவில் கட்சி ஆரம்பிக்க இருப்பதாக தகவல் கசிந்து வருகிறது.
இந்நிலையில், ஜூன் மாதத்தில், விஜயின் ஏற்பாடு செய்திருக்கும் பிரம்மாண்ட திட்டம் குறித்து, தகவல் வெளியாகியுள்ளது. அதாவது, 10-ஆம் வகுப்பு மற்றும் 12-ஆம் வகுப்புக்கான தேர்வு முடிவுகள், சமீபத்தில் வெளியானது. இதில், 234 தொகுதிகளிலும், அதிக மதிப்பெண்கள் பெற்ற மாணவர்களுக்காக, விஜய் பிரம்மாண்ட விழா ஒன்றை ஏற்பாடு செய்துள்ளாராம்.
அந்த விழாவில், அவர்களுக்கு சிறப்பு பரிசுகளையும், ஊக்கத் தொகையையும் விஜய் வழங்க உள்ளாராம். குறிப்பாக, முதல் 3 மதிப்பெண்கள் பெற்ற மாணவர்களுக்கும், பெற்றோர் இல்லாத நிலையிலும், நல்ல மதிப்பெண்கள் பெற்ற மாணவர்களுக்கும், பெரிய அளவிலான பரிசுத் தொகை வழங்க உள்ளாராம்.
நடிகர் விஜயின் இந்த பிரம்மாண்ட திட்டம், சமூக ஆர்வலர்களிடையே, நல்ல வரவேற்பை பெற்றுள்ளன. அதே சமயத்தில், அரசியலில் நுழைவதற்கான முதற்கட்ட பணியாக இது இருக்கலாம் என்றும், நெட்டிசன்கள் சிலர் தங்களது கருத்துக்களை கூறி வருகின்றனர்.