ஜெயிலர் படம் தொடங்கின நாள் முதலே விஜய்க்கும் ரஜினிக்கும் மோதல் ஆரம்பமாகிவிட்டது. சூப்பர்ஸ்டார் பட்டம் யாருக்கு? என்ற பஞ்சாயத்து தமிழ்நாட்டையே ஆட்டிப்படைத்துவிட்டது.
ஜெயிலர் படத்தின் இசைவெளியீட்டு விழாவில் ரஜினி சொன்ன கழுகு மற்றும் காகம் கதையும் விஜய்க்கு எதிராகவே அமைந்திருந்தது. இதனால், விஜய் ரசிகர்களும் ரஜினியின் மீது கோபத்தில் இருந்து வந்தனர்.
இந்நிலையில், ஜெயிலர் படம் வெளியாகி வசூல் ரீதியாக சாதனை படைத்து வரும் நிலையில், நடிகர் விஜய், நெல்சனுக்கு தொலைபேசி மூலம் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். இதையடுத்து, விஜயின் பெருந்தன்மையை நெட்டிசன்கள் பாராட்டி வருகின்றனர்.