விஜய்-க்காக விஜயகாந்த் செய்த மிகப்பெரிய உதவி! யாருக்கு வரும் இந்த மனசு?

நடிகர் விஜய் ஹீரோவாக அறிமுகமான காலகட்டத்தில், தொடர்ந்து பல்வேறு தோல்வி படங்களை கொடுத்து வந்தார். இந்த படங்களை இயக்கிய அவரது தந்தை எஸ்.ஏ.சந்திரசேகர், கடனாளியாகவும் மாறினார்.

இதனால், கேப்டன் விஜயகாந்தை வைத்து புதிய படம் ஒன்றை இயக்கி, தன்னுடைய மார்கெட்டை உயர்த்துவதற்கு, எஸ்.ஏ.சந்திரசேகர் முடிவு செய்தார். இந்த விஷயத்தை விஜயகாந்திடமும், எஸ்.ஏ.சி கூறியுள்ளார்.

ஆனால், இதற்கு மறுப்பு சொன்ன கேப்டன் விஜயகாந்த், “உங்கள் மகனை விட்டுவிட்டு, என்னிடம் படம் பண்ணினால், அது ஹிட்டாகும். ஆனால், உங்கள் மகன் மனது மிகவும் கஷ்டப்படும்.

அதனால், நீங்கள் உங்கள் மகனை ஹீரோவாக வைத்தே திரைப்படம் ஒன்றை இயக்குங்கள். அதில், நான் சிறப்புத் தோற்றத்தில் வேண்டுமானால் நடிக்கிறேன்” என்று கூறியுள்ளார்.

அவ்வாறு, விஜயும், விஜயகாந்தும் இணைந்து நடித்த திரைப்படம் தான் செந்தூரப் பாண்டி.

விஜயகாந்த் இடத்தில் வேறு எந்த நடிகர் இருந்தாலும், அந்த படத்தில் ஹீரோவாக அவர்களே நடித்திருப்பார்கள். ஆனால், அது கேப்டன் என்பதால் தான், இந்த அற்புதம் நடந்தது என்று, சினிமாவாசிகள் கூறி வருகின்றனர்.

RELATED ARTICLES

Recent News