பெரும் வெற்றி அடைந்த பல்வேறு திரைப்படங்கள், ரீ ரிலீஸ் ஆகும் கலாச்சாரம் தற்போது உருவாகி உள்ளது. அந்த வகையில், தற்போது கேப்டன் விஜயகாந்தின் ப்ளாக் பஸ்டர் வெற்றிப் பெற்ற திரைப்படம், தற்போது ரீ ரிலீஸ் ஆக உள்ளது.
அதாவது, ஆர்.கே.செல்வமணி இயக்கத்தில், விஜயகாந்த் நடிப்பில், அவரது 100-வது திரைப்படமாக வெளியான திரைப்படம் கேப்டன் பிரபாகரன். பெரும் பொருட் செலவில் எடுக்கப்பட்ட அந்த திரைப்படம், மிகப்பெரிய வெற்றிப் பெற்றது.
இந்த திரைப்படம் வெளியாகி 34 ஆண்டுகள் ஆன நிலையில், தற்போது ரீ ரிலீஸ் செய்ய படக்குழுவினர் முடிவு செய்துள்ளார்களாம். இதுதொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு, விரைவில் வெளியாகும் என்றும், சொல்லப்படுகிறது.