தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவராகவும், தமிழக அரசியலில் முக்கிய ஆளுமையாகவும் இருந்தவர் கேப்டன் விஜயகாந்த். இவர், உடல்நலக்குறைவு காரணமாக, 2023-ஆம் ஆண்டு, டிசம்பர் 28-ம் தேதி அன்று, இயற்கை எய்தினார்.
இதையடுத்து, இவரது உடல் கோயம்பேட்டில் உள்ள தே.மு.தி.க தலைமை அலுவலகத்தில் நல்லடக்கம் செய்யப்பட்டது. இந்த நினைவிடத்திற்கு, தொண்டர்களும், பொதுமக்களும் சென்று, அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
இந்நிலையில், விஜயகாந்தின் முதலாம் ஆண்டு நினைவு தினமான இன்று, அவரது மனைவி நினைவிடத்தில் கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தினார். உடன், கட்சி நிர்வாகிகள் பலர் இருந்தனர். இதேபோல், சீமான், OPS, அமைச்சர் சேகர்பாபு உள்ளிட்ட மாற்று அரசியல் கட்சியினரும், நினைவிடத்தில் மரியாதை செலுத்தினர்.