விஜயகாந்த் இறுதிச்சடங்கு: பொதுமக்களுக்கு அனுமதியில்லை!

தேமுதிக நிறுவன தலைவர் விஜயகாந்த் உடல்நல குறைவு காரணமாக நேற்று தனியார் மருத்துவமனையில் காலமானார் அவரது உடலானது இன்று சரியாக 4.45 மணி அளவில் அவரது கட்சி அலுவலகத்தில் இறுதிச் சடங்கு அரசு மரியாதையுடன் நடைபெறுகிறது.

இந்நிலையில், சென்னை தீவுத்திடலில் இருந்து இறுதி ஊர்வலம் தொடங்கியுள்ளது. மக்கள் வெள்ளத்துக்கு மத்தியில் சென்னை தீவுத்திடலில் இருந்து கோயம்பேட்டில் உள்ள தேமுதிக அலுவலகம் வரை இறுதி ஊர்வலம் நடக்கிறது.

மேலும், நல்லடக்க நிகழ்வில் குடும்பத்தினர் மற்றும் உறவினர்களுக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்படும் என்று காவல் துறை தெரிவித்துள்ளது.

முக்கிய பிரமுகர்கள் மற்றும் குடும்ப உறுப்பினர்கள் 200 பேருக்கு மட்டுமே அனுமதி அட்டை வழங்கப்பட்டுள்ளது. விஜயகாந்த்தின் இறுதிச்சடங்கில் தமிழக அரசு சார்பில் அமைச்சர்கள் மா.சுப்பிரமணியன், தா.மோ.அன்பரசன் பங்கேற்க உள்ளனர்.

RELATED ARTICLES

Recent News