நடிகர் விஜய் மக்கள் இயக்கத்தின் மூலம் பல்வேறு உதவிகளை மேற்கொண்டு வருகிறார்.சமீபத்தில் தமிழகத்தின் 234 தொகுதிகளிலும் தொகுதி வாரியாக 10-ம் மற்றும் 12-ம் வகுப்பு பொதுத் தேர்வில் முதல் 3 இடங்களை பிடித்த மாணவ, மாணவிகளுக்கு ஊக்கத்தொகை வழங்கி கவுரவித்தார்.அந்நிகழ்ச்சியில் நடிகர் விஜய் மாணவர்கள் மத்தியில் பேசிய கருத்துக்கள் வைரலாகி வந்தது.
இந்நிலையில், நடிகர் விஜய் பனையூர் இல்லத்தில் மாவட்ட பொறுப்பாளர்களுடன் ஆலோசனை நடத்துவதற்காக வந்தடைந்தார். இன்று முதல் 3 நாட்களுக்கு இந்த ஆலோசனை நடைபெறும் என்று தகவல் வெளிவந்துள்ளது .குறிப்பாக போட்டோவுடன் கூடிய அடையாள அட்டையுடன் வரும் மாவட்ட பொறுப்பாளர்களுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்படுகிறது. இந்த கூட்டத்தில் 300 பேர் கலந்து கொண்டுள்ளனர், மேலும் விஜய்யின் புது கெட்டப்பை ரசிகர்கள் ஷேர் செய்து வருகின்றனர்.