பனையூரில் விஜயின் முதல் நாள் கூட்டம் !உருவான சிக்கல்களும் சிலிர்ப்புகளும் !

சினிமா வட்டாரங்களில் முன்னணி வகிக்கும் விஜய் ,தற்போது அரசியலிலும் ஆர்வம் காட்டி வருகிறார். இதை உறுதிப்படுத்தும் விதமாக, விஜய் தற்போது விஜய் மக்கள் இயக்கம் வழியாக பல்வேறு உதவிகளை செய்து வருகிறார்.

இந்நிலையில் அவர் தொகுதி பொறுப்பாளர்களுடன் இணைந்து ,இன்று முதல் மூன்று நாட்களுக்கு ஆலோசனை நடுத்துவதற்ககாக பனையூர் கிளம்பியுள்ளார். அவர் கிளம்பும்பொழுது அவர் ரசிகர்களும் ஆரவாரம் செய்தபடி ,இரு சக்கரவாகனங்களில் தொடர்ந்துள்ளனர்.இதனால் போக்குவரத்து விளக்குகளை மதிக்காமல் விஜயின் கார் கடந்துவந்துள்ளது என்று தகவல் வெளியாகியுள்ளது.

பின்னர்,பனையூர் வந்தடைந்த விஜய் , ரசிகர்களையும் ,மக்களையும் வணங்கியபடி சென்றுள்ளார்.இதில் ரசிகர் ஒருவர் விஜயை முதல் முறை பார்த்ததால் , கை , கால் சிலிர்த்தபடி நெகிழ்ச்சியில் முடங்கி நாற்காலியில் அமர்ந்துள்ளார். இக்காணொளியானது, தற்போது வைரலாகி வருகிறது.

RELATED ARTICLES

Recent News