துணிவு வெற்றிக்கு பிறகு, விக்னேஷ் சிவனின் ஏகே 62 படத்தில் நடிக்கவுள்ளார் அஜித். இதற்கான ஆரம்பகட்ட பணிகளும் விறுவிறுப்பாக நடந்து வருவதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் அஜித்தின் அடுத்த படம் குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளது.
அதாவது ஏகே 63 படத்தை இயக்குனர் அட்லீ எடுக்கவுள்ளதாகவும், ஏஆர் ரகுமான் இசையமைக்கவுள்ளதாகவும் திரை வட்டாரங்கள் மத்தியில் பேசப்பட்டு வருகிறது. ஆனால் அதிகாரப்பூர்வ தகவல் ஏதும் வெளியாகவில்லை. தற்போது ஷாருக்கான் படத்தை இயக்கி வரும் அட்லீ, தளபதி விஜய்க்கு தெறி, மெர்சல், பிகில் என ஹாட்ரிக் ஹிட் கொடுத்தது குறிப்பிடத்தக்கது.