Connect with us

Latest Tamil News, Tamil Nadu News Today, இன்றைய செய்திகள்

“அஜித் என்னைப் பற்றி அப்படி பேசுவார்-னு நினைக்கல” – விஜய் தாய் பேட்டி வைரல்!

சினிமா

“அஜித் என்னைப் பற்றி அப்படி பேசுவார்-னு நினைக்கல” – விஜய் தாய் பேட்டி வைரல்!

நடிகர் விஜயின் தாயும், பாடகியுமானவர் ஷோபா சந்திரசேகர். இவர் சமீப காலங்களாக, பல்வேறு பேட்டிகளை வழங்கி வருகிறார். அவ்வாறு வழங்கிய பேட்டி ஒன்றில், நடிகர் அஜித் குறித்து சுவாரசியமான தகவல் ஒன்றை பேசியுள்ளார்.

அதாவது, குஷி படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவுக்கு அஜித் சிறப்பு விருந்தினராக கலந்துக் கொண்டாராம்.

அப்போது, அஜித் பேசும்போது, ராஜாவின் பார்வையிலே படப்பிடிப்பில் நான் இருந்தபோது, எனக்கும் சேர்த்து, ஷோபா அம்மா உணவு எடுத்துக் கொண்டு வருவார். அவரது கையால் நான் சாப்பிட்டு இருக்கிறேன்.

அதனை என்னால் மறக்கவே முடியாது என்று அஜித் கூறினாராம். இந்த தகவலை , நேர்காணலில் ஷோபா சந்திரசேகர் பேசியுள்ளார். இதுதொடர்பான வீடியோ, இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.

More in சினிமா

To Top